Saw, Insidious போன்ற திரைப்படங்களை இயக்கிய James van ன் அடுத்த படைப்பு "The Conjuring".
நிஜ வாழ்வில் நடந்த சம்பவத்தை முழுக்க முழுக்க பயம் என்ற ஒருவார்த்தையையே மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள். கதை என்ற வகையில் புதியதாக ஏதும் இல்லை என்றாலும், படத்தை present செய்திருக்கும் விதம் அபாரம்.
நடிப்பு, கேமரா, மியூசிக் மற்றும் இயக்குனர் james தான் படத்தின் கதாநாயகர்கள் !. நீண்ட நாட்களாக ஒரு பேய் படம் பார்க்க வேண்டுமென காத்திருப்போரும், மொக்கை ஹாலிவூட் ஆக்சன் படங்கள் பார்த்து சளித்திருப்போருக்கும் இந்த படம் ஒரு நல்ல ட்ரீட் !